அஸ்வெசுமவின் இரண்டாம் கட்டத்திற்கான கணக்கெடுப்பு தொடர்பில் வெளியான தகவல்
Sri Lanka
Sri Lankan Peoples
By Mayuri
அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டம் தொடர்பான கணக்கெடுப்பை எதிர்வரும் 31ஆம் திகதிக்குள், நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
விண்ணப்ப கோரல்
இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கத் தவறிய குடும்பங்களுக்கு, முதற்கட்டமாகக் கடந்த பெப்ரவரி மாதம் விண்ணப்பங்கள் கோரப்பட்டன.
அதற்கமைய சுமார் 454,924 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |