பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் அரசினால் பறிமுதல்

Sri Lanka Police Investigation Money FCID - Financial Crimes Investigation Division
By Vethu Sep 18, 2026 10:05 AM GMT

சட்டவிரோத முறையில் ஈட்டியதாக சந்தேகிக்கப்படும் இரண்டு உரிமையாளர்களின் சுமார் 140 மில்லியன் ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு, முடக்கியுள்ளது.

இரண்டு சந்தேகநபர்களில் ஒருவர் வத்தைளை பிரதேசத்தைச் சேர்ந்தவராகும். போதைப்பொருள் வர்த்தகம் மூலம் ஈட்டிய 900 லட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.

மற்றைய நபர் தனமல்விலப் பிரதேசத்தை சேர்ந்தவராகும். சந்தேகநபர் சட்டவிரோதமான முறையில் ஈட்டிய பணத்தில் கொள்வனவு செய்த 350 லட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான ஜீப் வண்டியை பறிமுதல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சொத்துகள் விசாரணைப் பிரிவு 

வத்தைளைப் பிரதேசத்தை சேர்ந்த சந்தேக நபர் போதைப்பொருள் வர்த்தகம் மூலம் சட்டவிரோதமாக ஈட்டிய பணத்தில் கொள்வனவு செய்துள்ள சொத்துகள் தொடர்பில், சட்டவிரோத சொத்துகள் விசாரணைப் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் அரசினால் பறிமுதல் | Assets Worth 140 Mn Frozen Over Suspected Illegal

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

400 லட்சம் ரூபாய் பெறுமதியான ஹுனுப்பிட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள 7 பேர்ச்சஸ் காணியும் இரு மாடிக் கட்டடமும்,

300 லட்சம் ரூபாய் பெறுமதியான ஹுனுப்பிட்டிய, வத்தைளை முகவரியில் அமைந்துள்ள 17 பேர்ச்சஸ் காணியும் இரு வீடுகளும்,

50 லட்சம் ரூபாய் பெறுமதியான ஹுனுப்பிட்டிய, வத்தைளை முகவரியில் அமைந்துள்ள 5 பேர்ச்சஸ் காணியும் கட்டடமும்,

70 லட்சம் ரூபாய் பெறுமதியான காந்தி மாவத்தை, ஹுனுப்பிட்டிய முகவரியில் அமைந்துள்ள 3 பேர்ச்சஸ் காணியும் கட்டடமும்,

8 லட்சம் ரூபாய் பெறுமதியான ஸ்பேசியா வகைத் கார் ஒன்றும் அதிகாரிகளால் முடக்கப்பட்டள்ளது.

போதைப்பொருள் வர்த்தகம்

சந்தேக நபர் போதைப்பொருள் வர்த்தகம் மூலம் சட்டவிரோதமாக ஈட்டியுள்ள சொத்துகள் மீது இன்று முதல் 14 நாட்களுக்கு செயற்பாட்டை முடக்கும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் அரசினால் பறிமுதல் | Assets Worth 140 Mn Frozen Over Suspected Illegal

இந்த நிலையில் தனமல்விலப் பிரதேசத்தில் வசிக்கும் நபர் சட்டவிரோதமான முறையில் கொள்வனவு செய்துள்ள சொத்துகள் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பணிப்பாளரால் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கமைய, சட்டவிரோத சொத்துகள் விசாரணைப் பிரிவு பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த விசாரணையையும் ஆரம்பித்துள்ளது.

அந்த விசாரணைக்கமைய, மேற்கண்ட சந்தேக நபர் போதைப்பொருள் வர்த்தகம் மூலம் சட்டவிரோதமாக ஈட்டிய பணத்தில் கொள்வனவு செய்துள்ள 350 லட்சம் ரூபாய் பெறுமதியான டொயோட்டா வகைத் ஜீப் வாகனத்தை விற்பனை செய்தல், கைமாற்றுதல் மற்றும் வேறு செயற்பாடுகளை மேற்கொள்ளுதல் ஆகியவற்றைத் தடுக்கும் வகையில் நேற்று முதல் 14 நாட்களுக்கு செயற்பாட்டை முடக்கும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.