நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி

By Fathima Sep 17, 2023 09:40 AM GMT

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி ஆரம்பமாகியுள்ளது.

கொழும்பு ஆர். பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் இன்று(17.09.2023) இன்று பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

நடப்பு செம்பியனான இலங்கை அணி 7-வது முறையாக ஆசிய கிண்ணத்தை வெல்லும் எதிர்பார்ப்பில் உள்ளது.

செம்பியன் பட்டம்

இலங்கை அணி 1986, 1997, 2004, 2008, 2014, 2022-ம் ஆண்டுகளில் செம்பியன் பட்டம் பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி | Asia Cup Live Update News Sl Vs Ind 2023

அதேநேரம் இந்திய அணி 1984, 1988, 1990-91, 1995, 2010, 2016, 2018 ஆகிய ஆண்டுகளில் ஆசிய கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.

இலங்கை அணி

பெத்தும் நிஸ்ஸங்க,  குசல் பெரேரா,  குசல் மெண்டிஸ்,  சதீர சமரவிக்ரம,  சரித் அசலங்கா,  தனஞ்சய டி சில்வா,  தசுன் ஷானக,   துனித் வெல்லாலகே,  துஷான் ஹேமந்த பிரமோத், மதுஷன் மதீஷ பத்திரன,

இந்திய அணி

ரோஹித் சர்மா,   சுப்மன் கில்,  விராட் கோலி,  கேஎல் ராகுல்,  இஷான் கிஷன்,  ஹர்திக் பாண்டியா,  ரவீந்திர ஜடேஜா,  வொஷிங்டன் சுந்தர்,  ஜஸ்பிரித் பும்ரா,  குல்தீப் யாதவ், முகமது சிராஜ்