மட்டக்களப்பில் பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டவருக்கு பிணை

Sri Lankan Tamils Batticaloa Eastern Province
By Madheeha_Naz Jan 23, 2024 11:37 PM GMT
Madheeha_Naz

Madheeha_Naz

மட்டக்களப்பில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உப தலைவர்  பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவானின் உத்தரவுப்படியே, என். ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உப தலைவர் நகுலேஸ் நேற்று செவ்வாய்க்கிழமை (23.01.2024) பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.  

கடந்த வருடம் நவம்பர் 25ஆம் திகதி வெல்லாவெளி பிரதேசத்திலுள்ள ஜனநாயகப் போராளிகள் கட்சி காரியாலயத்தில் மாவீரர்களின் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வு நடாத்தப்பட்ட நிலையில் நகுலேஸ் பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்தார்.  

மட்டக்களப்பில் பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டவருக்கு பிணை | Arrested In Anti Terrorism Act Released In Bail

60 நாளின் பின்னர் பிணை

இந்நிலையில், குறித்த வழக்கு நேற்று களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நிலையில், சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.