விமல் வீரவனசவுக்கு பிடியாணை!
Wimal Weerawansa
Sri Lanka
Law and Order
By Fathima
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கோட்டை நீதவான் நீதிமன்றம் மூலம் இவ்வாறு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உத்தரவு
வழக்கு ஒன்றிற்கு நீதிமன்றத்தில் முன்னிலையாகாத காரணத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தால் தேசிய சுதந்திர முன்னணிக்கு வழங்கப்பட்ட 40 அரச வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு 9 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான வழக்கு தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.