நீதிமன்றில் முன்னிலையான விமல் வீரவன்ச...
Wimal Weerawansa
Law and Order
Court of Appeal of Sri Lanka
By Fathima
கொழும்பு உயர் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச சற்று முன்பு நீதிமன்றத்தில் முன்னிலையானார்.
பிடியாணை
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைபடுத்துமாறு கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி முகமது மிஹால் பிடியாணை பிறப்பித்தது.

75 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்களை சட்டவிரோதமாகச் சேர்த்ததாகக் கூறி இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பிரதிவாதியாக அவர் பெயரிடப்பட்டுள்ளார்.
இந்நிலையில், குறித்த வழக்கு தொடர்பில் நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறியதால், இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.