மதுபான விலைகள் குறித்து வெளியான அறிவிப்பு
எதிர்வரும் பண்டிகை காலத்தில் மதுபான விலைகள் குறைக்கப்படமாட்டாது என மதுவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி தெரிவித்துள்ளார்.
மதுபான வகைகளின் விலைகளை குறைக்குமாறு நிதி அமைச்சிற்கோ அல்லது மதுவரித் திணைக்களத்திற்கோ எவ்வித கோரிக்கைகளும் முன்வைக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோரிக்கை
அவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டாலும் விலையை குறைக்கவோ அல்லது வற் வரியை குறைக்கவோ எவ்வித சாத்தியங்களும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
பண்டிகை காலத்திற்கு முன்னதாக மதுபான வகைகளின் விலைகள் குறைக்கப்படும் என பல்வேறு தரப்பினர் கருத்து வெளியிட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த கருத்து காரணமாக பலர் மதுபான கொள்வனவுகளை வரையறுத்துக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மதுபான விற்பனையில் வீழ்ச்சி
இதனால் மதுபான விற்பனை குறைந்துள்ளதாகவும் விற்பனை செய்யப்பட்ட மதுபான வகைகள் களஞ்சியங்களில் தேங்கிக் கிடப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மதுபான விற்பனை குறைந்த போதிலும் மதுபான வகைகளை குறைந்த விலையில் விற்பனை செய்ய மதுபான உற்பத்தியாளர்கள் தயாரில்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.