கட்டுநாயக்க விமான நிலையத்தில் முன்னாள் இராணுவ சிப்பாய் கைது

Bandaranaike International Airport Sri Lanka Crime
By Laksi Dec 07, 2024 09:31 AM GMT
Laksi

Laksi

நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இன்று (07) முன்னனெடுக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர் அநுராதபுரம் (Anuradhapura), பொத்தானேகம பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய முன்னாள் இராணுவ சிப்பாய் ஆவார்.

எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் :சுகாதார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை

எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் :சுகாதார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை

கைது

குறித்த சந்தேக நபர் துபாயிலிருந்து இன்றைய தினம் அதிகாலை 12.35 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் முன்னாள் இராணுவ சிப்பாய் கைது | Army Soldier Arrested At Katunayake Airport

இதன்போது, விமான நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கொண்டு வந்த பயணப் பொதியிலிருந்து 20 ஆயிரம் வெளிநாட்டு சிகரெட்டுகள் அடங்கிய 100 சிகரெட் பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இதன் பெறுமதி 30 இலட்சம் ரூபா என தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

பாடசாலை மாணவர்களின் சீருடை தொடர்பில் வெளியான தகவல்!

பாடசாலை மாணவர்களின் சீருடை தொடர்பில் வெளியான தகவல்!

வைத்தியசாலையில் இருந்து அகற்றப்படும் இயந்திரம்: கண் கலங்கி நின்ற வைத்தியர்கள்!

வைத்தியசாலையில் இருந்து அகற்றப்படும் இயந்திரம்: கண் கலங்கி நின்ற வைத்தியர்கள்!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW