பெரும்பான்மை வாக்குகள் யாருக்கு கிடைத்தது..! அநுரவிற்கு ரணிலின் பதிலடி
பெரும்பான்மையான மக்கள் எனக்கு வாக்களிக்கவில்லை என்பதனை ஒப்புக்கொள்கிறேன் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தோற்றுப்போனால் வீட்டில் இருங்கள் என அண்மையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கூறியிருந்தார்.
இந்த நிலையில் இன்று (27) புதிய ஜனநாயக முன்னணியின் நீர்கொழும்பு பொதுக்குழுவில் கலந்து கொண்டு உரையாற்றும் போது, அநுரவின் கருத்திற்கு ரணில் பதிலளித்துள்ளார்.
ஒரே நிலையில் இருவரும்
தொடர்ந்து உரையாற்றுகையில், பெரும்பான்மையினர் எனக்கு வாக்களிக்கவில்லை. அதனால் தோற்றேன். அதே போல் அவருக்கும் பெரும்பான்மையினர் தங்களின் வாக்குகளை வழங்கவில்லை. இந்த வகையில் எனக்கும் அநுரவுக்கும் பெரும்பான்மைப் பலம் இல்லை.
இப்படி இருக்கும் போது எனக்கும் அவருக்கும் என்ன வித்தியாசம் உண்டு? மேலும் நான் பெரும்பான்மை இல்லாத முன்னாள் ஜனாதிபதி, அவர் பெரும்பான்மை இல்லாத தற்போதைய ஜனாதிபதி.
மேலும் அநுரவுக்கும் எனக்கும் ஒரே நிலைமை தான் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |