அநுரகுமார திசாநாயக்கவுக்கு பதிலாக லக்ஸ்மன் நிபுணராச்சி
Sri Lanka Parliament
Anura Kumara Dissanayaka
Sri Lanka
By Sivaa Mayuri
Courtesy: Sivaa Mayuri
ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள அநுர குமார திசாநாயக்கவின் நாடாளுமன்ற வெற்றிடத்தை, தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் லக்ஸ்மன் நிபுணராச்சி (Lakshman Nipunaarchchi ) நிரப்பவுள்ளார்
தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா (Tilvin Silva ) இதனை தெரிவித்துள்ளார்
விருப்பு வாக்கு பட்டியல்
புதிய நாடாளுமன்ற உறுப்பினரை நியமிப்பது தங்களின் வேலையல்ல என்றும், தேர்தல் சட்டத்தின்படி தேர்தல் ஆணையகமே அதைச் செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அடுத்தபடியாக விருப்பு வாக்கு பட்டியலில் லக்ஸ்மன் நிபுணரச்சி உள்ளார்.
இந்தநிலையில் அவர் தேர்தல் ஆணைக்குழுவினால் புதிய நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படுவார் என்றும் சில்வா கூறியுள்ளார்.