அஸ்வெசும பெறவுள்ளோருக்கு வெளியான அறிவித்தல்

Sri Lanka Sri Lankan Peoples Money
By Rakshana MA Dec 04, 2024 04:59 AM GMT
Rakshana MA

Rakshana MA

அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்காக விண்ணப்பங்களை 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் விண்ணப்பித்த குடும்பங்கள் மற்றும் தனிநபர்கள் அனுப்பத் தேவையில்லை என்று நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சகத்தின் நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

குறித்த குடும்பங்களின் விண்ணப்பங்கள் ஏற்கனவே அமைப்பில் உள்ளிடப்பட்டுள்ளதாக நலன்புரிப் பலன்கள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

கிக்பொக்சிங் போட்டியில் முஸ்லிம் மகா வித்தியாலய‌ மாணவன் தங்கம் வென்று சாதனை

கிக்பொக்சிங் போட்டியில் முஸ்லிம் மகா வித்தியாலய‌ மாணவன் தங்கம் வென்று சாதனை

நீடிக்கப்பட்ட தவணை

அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியாத குடும்பங்கள் மற்றும் தனிநபர்கள் விண்ணப்பிக்க டிசம்பர் 09 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதன்போது, ​​அஸ்வெசும திட்டத்திற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியாத குடும்பங்கள் மட்டுமே குறித்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஸ்வெசும பெறவுள்ளோருக்கு வெளியான அறிவித்தல் | Announcement For Aswesuma

மேலும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தனித்தனியாக அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பப் படிவங்களை பிரதேச செயலகங்களில் சமர்ப்பிக்க முயற்சிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே குடும்பமாக விண்ணப்பிக்கும் போது அனைத்து உறுப்பினர்களும் பிரதிநிதித்துவம் பெறும் வகையில் ஒரு விண்ணப்பத்தை சமர்ப்பித்தால் போதுமானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இஸ்ரேலில் உள்ள பள்ளிவாசல்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவு

இஸ்ரேலில் உள்ள பள்ளிவாசல்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவு

நாடாளுமன்றில் தாக்கப்பட்ட அர்ச்சுனா! தகாத வார்த்தைகள் பேசியதால் மீண்டும் சர்ச்சை

நாடாளுமன்றில் தாக்கப்பட்ட அர்ச்சுனா! தகாத வார்த்தைகள் பேசியதால் மீண்டும் சர்ச்சை

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW