கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பு!

Sri Lanka
By Fathima Apr 02, 2023 11:48 AM GMT

சந்தையில் கோழி இறைச்சியின் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, கோழி இறைச்சியின் விலை 260 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பண்டிகைக் காலம் மற்றும் வார இறுதி போன்ற காரணங்களால் கோழி இறைச்சியின்  விலை இவ்வாறு அதிகரித்துள்ளதாக கூறியுள்ளனர்.

கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பு! | An Increase In Chicken Meat

தொழில் நட்டம்

அகில இலங்கை பாரிய மற்றும் நடுத்தர அளவிலான கோழிப்பண்ணை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் அஜித் வீரசிங்க ,இன்றைய தினம் (02.04.2023) ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனை குறிப்பிட்டுள்ளர்.

மேலும், கோழிப்பண்ணை தொழில் ஏற்கனவே பாரிய நட்டத்தைச் சந்தித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.