அம்பாறை மாவட்ட பிறப்பு - இறப்பு பதிவாளராக எம்.வை. அக்றம் நியமனம்

Ampara Sri Lanka Eastern Province
By Rukshy Jul 18, 2024 06:45 AM GMT
Rukshy

Rukshy

அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்தியத்தின் கரைவாகுப்பற்று மருதமுனை -01 க்கான பிறப்பு - இறப்பு பதிவாளராக சமாதான நீதவான் முகம்மது யூசுப் முகம்மது அக்றம் நியமனம் பெற்றுள்ளார்.

கடந்த 2022.ஆம் ஆண்டு முதல் அதே பிராந்தியத்தின் முஸ்லிம் விவாகப்பதிவாளராக கடமையாற்றி வந்த இவர் தனது பதவிக்கு மேலதிகமாக நேற்று (17) முதல் பிறப்பு, இறப்பு பதிவாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

அம்பாறை மாவட்ட பிறப்பு - இறப்பு பதிவாளராக எம்.வை. அக்றம் நியமனம் | Amparai District Birth Death Registrar Appointment

இதற்கான நியமனக்கடிதத்தை அம்பாறை கச்சேரியில் வைத்து மஸ்ஜிதுன் நூர் ஜும்ஆப் பள்ளிவாசலின் தலைவரும் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தருமான எம்.ஐ.எம். முகர்றப் முன்னிலையில் பெற்றுக்கொண்டார்.

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW