இன்று முதல் அனைத்து மதுபான உரிமக் கட்டணங்களும் அதிகரிப்பு

Anura Kumara Dissanayaka Sri Lanka Sri Lankan Peoples
By Fathima Dec 12, 2025 05:42 AM GMT
Fathima

Fathima

இன்று முதல் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அனைத்து மதுபான உரிமக் கட்டணங்களும் 100 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளன.

வர்த்தமானி அறிவிப்பு

இது கடந்த 5 ஆம் திகதி ஜனாதிபதியால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவின் படி, இந்த விடயம் நடைமுறைக்கு வந்துள்ளது.

இன்று முதல் அனைத்து மதுபான உரிமக் கட்டணங்களும் அதிகரிப்பு | All Liquor License Fees To Increase From Today

அத்துடன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் கையொப்பத்துடன் தொடர்புடைய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் வருடாந்திர கலால் வரி, பாதுகாப்பு வைப்புத் தொகை மற்றும் தொழில்துறை அணுகலுக்கான ஒரு முறை கட்டணம் ஆகியவை அதற்கேற்ப அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.