பாத்திமா ஷபியாவை வாழ்த்திய ஷாம் நவாஸ்
இந்தியாவில் நடைபெற்ற 2025ஆம் ஆண்டிற்கான தெற்காசிய மெய்வல்லுநர் போட்டியில் இலங்கை சார்பாக கலந்துகொண்டு 3 தங்கப்பதக்கங்களை வென்ற மாணவி பாத்திமா ஷபியா யாமிக்கிற்கு அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் தலைவர் ஷாம் நவாஸ் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இனமத பேதத்துக்கு அப்பால் திறமைக்கு முன்னுரிமை
மேலும் அவர் தெரிவிக்கையில், "இம்மாணவியின் சாதனை தேசிய மட்டத்தில் ஒரு பெரிய சாதனையாக பார்க்கப்படும் அதேவேளை பல செய்திகளையும் சொல்வதாக அமைந்துள்ளது.

அத்துடன், திறமைக்கு இடம்கொடுக்கப்பட்டால் எப்படியெல்லாம் சாதிப்பார்கள் என்பதற்கு பாத்திமா ஷபியா ஒரு உதாரணமாகும்.
இந்நிலையில், இனமத பேதத்துக்கு அப்பால் திறமைக்கு முன்னுரிமையளிப்பதன் முக்கியத்துவத்தை ஷபியாவின் சாதனை தந்திருக்கிறது." என்றும் ஷாம் நவாஸ் குறிப்பிட்டுள்ளார்.
You May Like This Video...
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |