உக்ரைனிற்கு எதிராக போரிடும் இலங்கையர்கள் பலர் ரஸ்ய பிரஜைகளாக மாறியுள்ளனர்: அலிசப்ரி

Ali Sabry Russo-Ukrainian War Ukraine Russia
By Mayuri Jun 29, 2024 06:13 AM GMT
Mayuri

Mayuri

உக்ரைனிற்கு எதிராக போரிடும் இலங்கையை சேர்ந்த கூலிப்படையினரில் பலர் ரஸ்ய பிரஜைகளாக மாறியுள்ளனர் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், உக்ரைன் போர் முனைகளில் சிக்குண்டவர்களை மீட்டு தருமாறு கோரும் 446 முறைப்பாடுகள் இலங்கை வெளிவிவகார அமைச்சிற்கு கிடைத்துள்ளன.

அவர்களில் பலர் ரஸ்ய பிரஜைகளாக மாறியுள்ளனர், ரஸ்ய குடியுரிமையை பெற்றுக் கொண்டுள்ளனர். இன்னுமொரு நாட்டின் பிரஜாவுரிமையை நீங்கள் பெற்றுக்கொண்டால் இலங்கையின் பிரஜாவுரிமையை நீங்கள் இழந்துவிடுவீர்கள்.

உக்ரைனிற்கு எதிராக போரிடும் இலங்கையர்கள் பலர் ரஸ்ய பிரஜைகளாக மாறியுள்ளனர்: அலிசப்ரி | Ali Sabry Statement About Sri Lankans

தவறாக வழிநடத்தப்படும் இலங்கையர்கள்

நீங்கள் இலங்கை பிரஜை இல்லை என்பதால் உங்களின் சார்பில் பேசுவதற்கு எங்களிற்கு உரிமையில்லை. சிலர் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளனர் போல தோன்றுகின்றது.

முகாம்களில் உதவியாளர்களாக பணியாற்றுவதற்காக சேர்க்கப்படுவதாக தெரிவித்து அவர்களை போருக்குள் சிக்க வைத்துள்ளனர். ஏனையவர்கள் தெரிந்தே இணைந்து கொண்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW