வவுனியாவில் திறந்து வைக்கப்பட்ட இளைஞர் விவசாய தொழில் முனைவோர் கிராமம்

Vavuniya Sri Lanka Northern Province of Sri Lanka
By Rukshy Jul 10, 2024 06:26 AM GMT

வவுனியா  மாவட்டத்தில் இளைஞர் விவசாய தொழில் முனைவோர் கிராமம், கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கே. காதர் மஸ்தானாவால் அங்குரார்பணம் செய்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வானது வவுனியா - நாகர் இலுப்பைக்குளத்தில் நேற்று (09) காலை 9 மணியளவில் இடம்பெற்றது.

பலர் பங்கேற்பு

இந்நிகழ்வில் தொழில் முனைவோருக்கான விவசாய உபகரணங்கள், கால்நடை வளர்ப்புக்கான பொருட்கள் மற்றும் கோழிக்குஞ்சுகள் என்பன வழங்கி வைக்கப்பட்டதோடு மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டது.

வவுனியாவில் திறந்து வைக்கப்பட்ட இளைஞர் விவசாய தொழில் முனைவோர் கிராமம் | Agri Entrepreneurship Village Inaugurated

இதில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திர, மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், பிரதேச செயலாளர் நா.கமலதாசன், திட்டமிடல் பணிப்பாளர், கிராம சேவையாளர் உட்பட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGallery