அநுர அரசாங்கத்திற்கு மீண்டுமொரு வெற்றி
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களிலும் தேசிய மக்கள் சக்தி மீண்டும் வெற்றியைப் பதிவு செய்யும் என்று பிரதி அமைச்சர் ருவான் செனரத் தெரிவித்துள்ளார்.
மேலும், 76 வருடங்கள் அழிக்கப்பட்ட நாடு இரண்டு மாதங்களில் இந்த நிலைக்குக் கொண்டு வரப்பட்டமை போதவில்லையா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
அபிவிருத்தி
மிகவும் சிரமப்பட்டு பெற்றுக்கொள்ளப்பட்ட வெற்றியை பாதுகாத்துக்கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார்.
மீண்டும் நாட்டை கள்வர்களின் கைகளில் ஒப்படைத்துவிடக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களிலும் தேசிய மக்கள் சக்தி வெற்றியை பதிவு செய்யும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த வெற்றியைத் தொடர்ந்து நாட்டை அபிவிருத்தி செய்யும் பணிகள் முழு வீச்சில் முன்னெடுப்படும் என ருவான் செனரத் தெரிவித்துள்ளார்.