புதிய அமைச்சர்கள் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் அதிகரிப்பு

Anura Kumara Dissanayaka Sri Lanka Politician Government Of Sri Lanka Nalinda Jayatissa
By Laksi Dec 30, 2024 05:13 AM GMT
Laksi

Laksi

புதிய அமைச்சர்கள் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், புதிய அமைச்சர்கள் கடமைகளை ஆரம்பித்து ஐந்து வாரங்கள் மாத்திரமே நிறைவு பெற்றுள்ளது.

குறைக்கப்படும் பாடசாலை நாட்கள் : வெளியான அறிவிப்பு

குறைக்கப்படும் பாடசாலை நாட்கள் : வெளியான அறிவிப்பு

குற்றச்சாட்டுகளின் எண்ணிக்கை

அமைச்சர்களை நேரில் சந்திப்பதற்கு வாய்ப்பளிக்கவில்லை, அவர்கள் தொலைபேசியில் உரையாடுவதில்லை, ஊடக அறிக்கைகளை வெளியிடுவதில்லை, நேர்காணல்களை வழங்குவதில்லை என குற்றச்சாட்டுகளின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதைக் காணக் கூடியதாக உள்ளது.

புதிய அமைச்சர்கள் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் அதிகரிப்பு | Accusations Mount Against New Ministers

எவ்வாறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாலும் இலங்கை அரசுக்கு ஓர் சிறந்த அடித்தளத்தை அமைக்கும் பணியை நிறைவேற்றுவதற்கு எமது அமைச்சரவை அயராது உழைத்து வருவதை நான் பொறுப்புடன் கூற கடமைப்பட்டுள்ளேன்.

சட்டவிரோத மதத் தலங்களுக்கு அனுமதியில்லை: புத்தசாசன அமைச்சர் திட்டவட்டம்

சட்டவிரோத மதத் தலங்களுக்கு அனுமதியில்லை: புத்தசாசன அமைச்சர் திட்டவட்டம்

முறையான ஆய்வு

கடந்த அரசாங்கத்தில் இவ்வாறு அர்ப்பணிப்பின்றி முறையான ஆய்வுகளை மேற்கொள்ளாமல் தரவுகள் மற்றும் தகவல்கள் இன்றி, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்கள் போன்றோர் பதவி வகித்தமையாலும், தன்னிச்சையான முடிவுகளை மேற்கொண்டமையாலும் உருவாக்கிய நெருக்கடிகளுக்கு இந்நாட்டு மக்கள் முகங்கொடுத்து வருகின்றனர்.

புதிய அமைச்சர்கள் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் அதிகரிப்பு | Accusations Mount Against New Ministers

இந்தநிலையில் கடந்த பொதுத் தேர்தலில் இந்நாட்டு மக்கள் பெரும்பான்மை பலத்தை எமக்கு வழங்கியுள்ளனர்.

இந்த ஐந்து வருட காலப்பகுதியில் நாட்டை முன்னேற்றாமல் ஏனைய அரசாங்கத்தைப் போல வேறு ஏதேனும் விடயங்களை மேற்கொள்ள முடியும். இவ்வாறான செயற்பாடுகள் மூலம் அரசாங்கத்தால் முன்னேறிச் செல்வது எளிதான விடயம். எனினும் நாடு ஒருபோதும் முன்னேறாது. என தெரிவித்துள்ளார்.

சீன அரசாங்கத்தின் உதவியுடன் மட்டக்களப்பில் நிவாரணம் வழங்கி வைப்பு

சீன அரசாங்கத்தின் உதவியுடன் மட்டக்களப்பில் நிவாரணம் வழங்கி வைப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW