பாகிஸ்தானில் கார் விபத்தில் மந்திரி பலி

Pakistan Accident
By Fathima Apr 16, 2023 10:35 PM GMT
Fathima

Fathima

பாகிஸ்தானில் கார் விபத்தில் சிக்கி மந்திரி முப்தி அப்துல் ஷக்கூர் பலியாகியுள்ளார். 

பாகிஸ்தானில் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தலைமையிலான மந்திரி சபையில் மத விவகாரங்களுக்கான மந்திரியாக இருந்து வந்த முப்தி அப்துல் ஷக்கூர் என்பவரே உயிரிழந்துள்ளார்.

பாகிஸ்தானில் கார் விபத்தில் மந்திரி பலி | Accident Pakistan Minister Dies

இதனிடையே மந்திரியின் கார் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய காரில் இருந்த 5 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில் சம்பவம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறித்த விபத்தில் உயிரிழந்த மந்திரி முக்தியின் குடும்பத்தினருக்கு பிரதமர் ஷபாஸ் ஷெரீப், சக மந்திரிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.