யாழில் இடம்பெற்ற விபத்து! ஒருவர் பலி

Jaffna Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Dilakshan Feb 09, 2026 10:36 AM GMT
Dilakshan

Dilakshan

வட்டுக்கோட்டை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பொன்னாலையில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து மேலும் தெரியவருகையில், பொன்னாலை சந்தியில் இருந்து மாதகல் பக்கம் செல்கின்ற வீதியால் இருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்துள்ளனர்.

இதன்போது அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை மீறி வீதியோரம் நின்ற பனைமீது மோதி விபத்து சம்பவித்துள்ளது.

வார்த்தையை விட்டு சிக்கிய விமல் வீரவன்ச! நலிந்த வைத்த செக்

வார்த்தையை விட்டு சிக்கிய விமல் வீரவன்ச! நலிந்த வைத்த செக்


மேலதிக விசாரணை

விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்ப்பிக்கப்பட்டுள்ளார்.

யாழில் இடம்பெற்ற விபத்து! ஒருவர் பலி | Accident In Jaffna Ponnalai One Dead

உயிரிழந்தவரது சடலம் தற்போது காரைநகர் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பாக வட்டுக்கோட்டை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

சாரதி அனுமதிப் பத்திரத்திற்கு விண்ணப்பித்தோர் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்

சாரதி அனுமதிப் பத்திரத்திற்கு விண்ணப்பித்தோர் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்

தந்தை செல்வா இன்னோர் தடவை மரணிப்பதை அனுமதிக்க முடியாது...

தந்தை செல்வா இன்னோர் தடவை மரணிப்பதை அனுமதிக்க முடியாது...

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்..!