நுவரெலியா - கண்டி பிரதான வீதியில் பேருந்து விபத்து: 37 பேர் காயம்

By Mayuri Jul 11, 2024 02:48 AM GMT

நுவரெலியா - கண்டி பிரதான வீதியின் லபுக்கலை, டொப்பாஸ் பகுதியில் தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று (11) காலை இடம்பெற்ற இந்த விபத்தில் 37 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சுற்றுலா பேருந்து

சுற்றுலா சென்ற பேருந்து ஒன்றே, வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

நுவரெலியா - கண்டி பிரதான வீதியில் பேருந்து விபத்து: 37 பேர் காயம் | Accident At Nuwaraeliya

விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த பேருந்தில் 42 பேர் பயணித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW