செல்லப்பிராணிகள் வளர்ப்பவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

Colombo Sri Lanka Weather
By Mayuri Mar 20, 2024 06:00 AM GMT
Mayuri

Mayuri

செல்லப்பிராணிகளை ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை குளிப்பாட்டுவது நல்லது என கால்நடை மருத்துவர்கள் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.

நாட்டில் நிலவும் அதிக வெப்பம் காரணமாக வீடுகளில் வளர்க்கப்படும் நாய், பூனை போன்ற விலங்குகளுக்கு வெப்ப பக்கவாதம் ஏற்படும் அபாயம் உள்ளதாக விலங்கு நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை, அதிக வெப்பம் நிலவும் போது 20 நிமிடங்களுக்கு அதிகமாக பகல் நேரங்களில் செல்லப்பிராணிகளை வாகனத்தில் வைத்திருப்பது மிகவும் ஆபத்தானது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

வெப்ப அதிர்ச்சி

வீடுகளில் உள்ள விலங்குகள் மற்றும் சாலைகளில் உள்ள விலங்குகளும் வெப்ப அதிர்ச்சியால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதுடன், அவர்களுக்கு தண்ணீர் மற்றும் உணவு வழங்குவது அத்தியாவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் வீடுகளுக்குள் பாம்புகள் நுழையும் போக்கு அதிகரித்துள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW