மூதூரில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!
Sri Lanka Police
Crime
Drugs
By Fathima
மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள நெய்தல் நகர் பகுதியில் வைத்து ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மூதூர் போதை ஒழிப்புப் பிரிவு பொலிஸார் இன்று (10) காலை மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இந்த கைது நடவடிக்கை இடம்பெறுள்ளது.
ஹெரோயின் மீட்பு
இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 2 கிராம் 800 மில்லி கிராம் நிறையுடைய ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதுடன் கையடக்க தொலைபேசி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர் மூதூர் - நெய்தல் நகர் பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய சந்தேகநபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.