இந்தியாவில் இருந்து இலங்கையை வந்தடைந்த சுற்றுலா சொகுசுக் கப்பல்
Sri Lanka Tourism
Sri Lanka
India
By Harrish
பயணிகள் சுற்றுலா சொகுசுக் கப்பல் ஒன்று இந்தியாவில் சென்னையில் இருந்து இலங்கையை வந்தடைந்துள்ளது.
குறித்த கப்பலானது 800க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றியவாறு இன்று(19) காலை ஆறு மணியளவில் யாழ்ப்பாணம் - காங்கேசன் துறையை வந்தடைந்ததுள்ளது.
சுற்றுலா கப்பல்
இந்த கப்பலானது நேற்று முன்தினம்(17) ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
அங்கிருந்து பயணத்தை ஆரம்பித்து நேற்றையதினம்(18) திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்த நிலையில் இன்றையதினம்(19) யாழ்ப்பாணம் - காங்கேசன் துறையை வந்தடைந்துள்ளது.
அத்துடன், இந்த சுற்றுலா சொகுசுக் கப்பலானது இன்று(19) பிற்பகல் மீண்டும் இந்தியாவை நோக்கி பயணித்தை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |