புகையுடன் பயணித்த வாகனங்கள் கறுப்புப் பட்டியலில் இணைப்பு

Sri Lanka
By Mayuri Jul 25, 2024 11:27 AM GMT

சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் புகையுடன் பயணித்த 93 வாகனங்கள் இந்த வருடத்தில் கறுப்புப்பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதாக வாகன உமிழ்வுச் சோதனை அறக்கட்டளை நிதியம் தெரிவித்துள்ளது.

பொதுமக்களிடமிருந்து கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமைய குறித்த வாகனங்கள் கறுப்புப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் தசன் கமகே தெரிவித்துள்ளார்.

517 முறைப்பாடுகள்

அத்துடன் இந்த வருடத்தில் இதுவரையான காலப் பகுதியில் 517 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புகையுடன் பயணித்த வாகனங்கள் கறுப்புப் பட்டியலில் இணைப்பு | 93 Vehicles Blacklisted

மேலும் அவற்றில் 93 வாகனங்கள் கறுப்புப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW