சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஆகஸ்ட் மாத்தத்தில் அதிகரிப்பு

Sri Lanka
By Mayuri Aug 10, 2024 06:54 AM GMT
Mayuri

Mayuri

நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஆகஸ்ட் மாத்தத்தில் அதிகரித்துள்ளது.

அதன்படி, ஆகஸ்ட் மாதத்தில் முதலாம் திகதி முதல் 8 ஆம் திகதி வரை எட்டு நாட்களில் 53,150 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.

இந்நிலையில், நாட்டிற்கு இதுவரை 1,252,209 சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.

வருகை போக்கு வளர்ச்சி

ஏப்ரல் மாதத்தில் 35,000 பேரும், மே மாதத்தில் 26,000 பேரும், ஜூன் மாதத்தில் 27,000 பேரும், ஜூலை மாதத்தில் 43,000 பேரும் வாராந்திரம் வருகை தந்துள்ள போக்கு வளர்ச்சியடைந்துள்ளது.

சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஆகஸ்ட் மாத்தத்தில் அதிகரிப்பு | 53 000 Tourists Visit In 8 Days

ஆகஸ்ட் மாதத்தில் வாராந்திர சராசரி வருகை சராசரியாக 46,000 ஆகவும், நாளாந்த வருகை சராசரியாக 6,600 ஆகவும் உள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் கோடை காலம் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW