கொழும்பு நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தவரின் பணம் கொள்ளை
ஒன்றாக மது அருந்தி நண்பரின் ஐம்பது லட்சம் ரூபா பணத்தை நபர் ஒருவர் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கொழும்பு ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் அறையொன்றை ஒதுக்கி நண்பர்கள் இருவர் மது அருந்தியுள்ளனர்.
இவ்வாறு மது அருந்தியவர்களில் ஒருவர் கோடீஸ்வர வர்த்தகர் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபரின் ஐம்பது லட்சம் ரூபா பணத்தை, சக நண்பர் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கஹாவ பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
கொள்ளுப்பிட்டி நட்சத்திர ஹோட்டலில் குறித்த இருவரும் மது அருந்தியுள்ளனர்.
வர்த்தகர் மது போதையில் உறங்கியதனைத் தொடர்ந்து, நண்பர் பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்றதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நபரை கைது செய்ய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.