ஐந்து வகையான உரங்களின் விலை குறைப்பு

Sri Lanka Government Of Sri Lanka Ministry of Agriculture
By Laksi Aug 26, 2024 08:22 AM GMT
Laksi

Laksi

அரச உர நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படும் ஐந்து வகையான உரங்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அதன்படி, குறித்த உரங்களின் விலை  4,000 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு, தேயிலைக்கான உர மானியத்தை வழங்குவதற்குத் தேவையான மொத்தத் தொகையான 2400 மில்லியன் ரூபாவை இலங்கை தேயிலைச் சபை வழங்கியுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் நாடு பாதாளத்துக்கு சென்றது: ரிசாட் பதியுதீன் குற்றச்சாட்டு

கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் நாடு பாதாளத்துக்கு சென்றது: ரிசாட் பதியுதீன் குற்றச்சாட்டு

உரங்களின் விலை

தேயிலைப் பயிர்ச்செய்கைக்கான உர மானியத் திட்டம் கடந்த வாரம் முதல் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ஐந்து வகையான உரங்களின் விலை குறைப்பு | 5 Fertilizer Price Reduction

மேலும், தேயிலைப் பயிர்ச்செய்கைக்காக பயன்படுத்தப்படும் T 200, T 750, U 709, U 834 மற்றும் T 65 ஆகிய ஐந்து வகையான உரங்களின் விலைகளை அரச உர நிறுவனம் குறைத்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை

திருகோணமலையில் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க கோரி துண்டுப்பிரசுரம்

திருகோணமலையில் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க கோரி துண்டுப்பிரசுரம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW