நிறமூட்டும் தொழிற்சாலையில் ஐஸ் போதைப் பொருட்களை நுகர்ந்த நால்வர் கைது
நிறமூட்டும் தொழிற்சாலை ஒன்றில் ஐஸ் போதைப் பொருட்களை நுகர்ந்த 4 சந்தேக நபர்களை பெரிய நீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்றைய தினம் (29) இடம்பெற்றுள்ளது.
அம்பாறை (Ampara) மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸார் பிரிவிற்குட்பட்ட மருதமுனை பகுதியிலுள்ள நிறமூட்டும் தொழிற்சாலையில் நீண்ட காலமாக போதைப்பொருள் பாவனை நடைபெற்று வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
பொலிஸார் பரிசோதகர் ஜே.எஸ்.கே.வீரசிங்க தலைமையிலான குழு அங்கு சென்று சோதனை மேற்கொண்டதுடன், ஐஸ் போதைப்பொருளை நுகர்ந்த 4 சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்கள் 20, 18, 17, 17, வயது மதிக்கத்தக்கவர்கள் என்பதுடன் சந்தேக நபர் வசம் இருந்து போதைப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளது.
மிட்கப்பட்ட போதைபொருட்கள் சட்ட நடவடிக்கைக்காக நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |