வடக்கு முஸ்லிம் மக்கள் வெளியேற்றத்தின் 34ஆவது வருட நினைவு கூறல் நிகழ்வு

Jaffna Sri Lanka Northern Province of Sri Lanka
By Laksi Nov 01, 2024 01:31 PM GMT
Laksi

Laksi

யாழில் வடக்கு முஸ்லிம் மக்கள் வெளியேற்றத்தின் 34ஆவது வருட நினைவு கூறல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வானது யாழ்ப்பாணம் முஸ்லிம் கலாசார சபையின் ஏற்பாட்டில் யாழ் ஒஸ்மானியாக் கல்லூரி மஹ்மூத் மண்டபத்தில் கடந்த புதன்கிழமை (30) மாலை நடைபெற்றது.

கதை சொல்லும் நிகழ்வு எனும் தலைப்பில் முஸ்லிம் கலாசார சபையின் தலைவர் ஏ.சி.நைசர் தலைமையில் “இனச்சுத்திகரிப்பிலிருந்து மீளெழுவோம் - வடக்கு முஸ்லிம் மக்கள்” என்ற தொனிப்பொருளில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

நெருங்கும் பொதுத்தேர்தல்: விதிமீறல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

நெருங்கும் பொதுத்தேர்தல்: விதிமீறல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

கதை சொல்லும் நிகழ்வு 

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினர்களாகவும், பிரதம பேச்சாளர்களாகவும் பி.எஸ்.எம்.சரபுல் அனாம், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் எம்.திருவரங்கன் மற்றும் மௌலவி எம்.ஏ.பைசர் மதனி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

வடக்கு முஸ்லிம் மக்கள் வெளியேற்றத்தின் 34ஆவது வருட நினைவு கூறல் நிகழ்வு | 34Th Anniversary Of North Muslim Exodus

நிகழ்வின் கௌரவ விருந்தினர்களாக மௌலவி ஏ.எம்.அப்துல் அஸீஸ் மற்றும் யாழ் கதீஜா மகா வித்தியாலய அதிபர் ஏ.சி.ஜென்சி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

1990.10.30 ஆம் திகதி வடக்கிலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்ட போது இடம்பெற்ற நிகழ்வுகள் மற்றும் சம்பவங்களை கதை வடிவில் இளம் தலைமுறையினருக்கு சொல்லிக் கொடுக்கும் வகையில் விருந்தினர்களின் உரைகள் இடம்பெற்றது.

பிரதமரை சந்தித்து கலந்துரையாடிய அகில இலங்கை தாதியர் சேவை சங்கத்தின் பிரதிநிதிகள்

பிரதமரை சந்தித்து கலந்துரையாடிய அகில இலங்கை தாதியர் சேவை சங்கத்தின் பிரதிநிதிகள்

முஸ்லிம் மக்கள் வெளியேற்றம்

விருந்தினர்களின் உரைகள் ஒவ்வொன்றும் வெளியேற்றத்தின் சம்பவங்கள், மக்களின் இழப்புக்கள், அகதி வாழ்க்கையின் அவலங்கள், மீள்குடியேற்றத்தின் சவால்கள், முஸ்லிம் சமூகம் தாமாக இனச்சுத்திகரிப்பிலிருந்து மீளெழுவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையிலான நல்லிணக்க முயற்சிகளை தொடர்ந்தும் கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதாக அமைந்திருந்தது.

வடக்கு முஸ்லிம் மக்கள் வெளியேற்றத்தின் 34ஆவது வருட நினைவு கூறல் நிகழ்வு | 34Th Anniversary Of North Muslim Exodus

மேற்படி நிகழ்வில் யாழ்ப்பாணம் முஸ்லிம் இளைஞர்கள், யுவதிகள், பாடசாலை மாணவர்கள், யாழ் முஸ்லிம் ஒன்றியத்தின் பிரதிநிதி ஜனாப் ஆரிப், பொதுமக்கள் மற்றும் யாழ்ப்பாணம் முஸ்லிம் கலாசார சபையின் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று பதிவான மாற்றம்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று பதிவான மாற்றம்

முப்படையினரின் சம்பள அதிகரிப்பு: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

முப்படையினரின் சம்பள அதிகரிப்பு: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW

GalleryGalleryGallery