காத்தான்குடியில் கைது செய்யப்பட்ட 30 பேருக்கும் பிணை
காத்தான்குடியில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 30 பேரையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ஒரு இலட்சம் ரூபா சரீரப்பிணையில் விடுவித்துள்ளார்.
மட்டக்களப்பு நீதவான் முன்னிலையில் நேற்று (01.03.2024) மாலை முன்னிலைப்படுத்தப்பட்டபோது அவர்களை பிணையில் செல்ல அனுமதித்ததுடன் எதிர்வரும் 26ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
விசேட சோதனை
மேலும் தெரியவருகையில்,
காத்தான்குடி பால முனை பகுதியில் வீடு ஒன்றில் சட்டவிரோதமாக கூட்டம் நடத்திய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலையான சஹ்ரான் ஹாசிமின் சகோதரியின் கணவர் மற்றும் 4 பேர் உட்பட 30 பேரை சந்தேகத்தின் பேரில் நேற்று (01) அதிகாலையில் பொலிஸார் கைது செய்துள்னர்.
இதன்போது கைது செய்யப்பட்டவர்களின் வீடுகள் பொலிஸாரினால் விசேட சோதனை நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
இதில் கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் நேற்று (01) மாலை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே அவர்களை சரீரப்பிணையில் செல்ல அனுமதித்ததுடன் எதிர்வரும் 26ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.