மாவனெல்லையில் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்ட இளைஞர்கள்

Sri Lanka Police Sri Lankan Peoples Crime
By Rakshana MA Dec 30, 2024 05:55 AM GMT
Rakshana MA

Rakshana MA

போதை மாத்திரைகளை வைத்திருந்த மூன்று சந்தேகநபர்கள் மாவனெல்லை(Mawanella) பிரதேசத்தில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, மாவனெல்லை ஹீந்தெனிய மயானத்திற்கு அருகில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்டுள்ள குறித்த சந்தேக நபர்களிடமிருந்து 8,100 போதை மாத்திரைகள், அவர்கள் பயன்படுத்திய வான் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கையில் கச்சா எண்ணெய்யின் விலையில் திடீர் மாற்றம்

இலங்கையில் கச்சா எண்ணெய்யின் விலையில் திடீர் மாற்றம்

போதைப்பொருள் விற்பனை 

கொழும்பில் இருந்து வான் ஒன்றில் கொண்டு வரப்பட்ட போதை மாத்திரைகளை அப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவருக்கு விற்பனை செய்யும் போது சந்தேகநபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மாவனெல்லையில் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் | 3 Mans Narcotic Pills Has Arrested In Mawanella

அத்துடன் சந்தேகநபர்கள் 22, 24 மற்றும் 25 வயதுடைய மாவனெல்லை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

தொடர்ந்தும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவனெல்லை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மூதூர் - சேனையூர் அனாமிகா பண்பாட்டு மையம் நடாத்திய விருது வழங்கல் நிகழ்வு

மூதூர் - சேனையூர் அனாமிகா பண்பாட்டு மையம் நடாத்திய விருது வழங்கல் நிகழ்வு

தூய்மையான இலங்கை வேலைத்திட்டம் : நாளை முதல் நடைமுறைக்கு

தூய்மையான இலங்கை வேலைத்திட்டம் : நாளை முதல் நடைமுறைக்கு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW