வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவுறுத்தல்
"வாக்கு உங்கள் உரிமை, நவம்பர் 14 ஆம் திகதி அதனைக் கட்டாயம் பயன்படுத்துங்கள்."என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ. ரத்நாயக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (12) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தேர்தலை நீதியாக நடத்துவதற்குரிய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
இந்தநிலையில், பொதுத் தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் கூட உரிய வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆர்.எம்.ஏ. ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தேர்தல் முடிந்த பின் வாக்கு என்னும் பணிகள் எதிர்வரும் 14ஆம் திகதி மாலை 4.15 மணிக்கு ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |