வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
நாடாளுமன்ற பொது தேர்தலில் வாக்களிக்கும் போது புள்ளடியை மாத்திரம் பயன்படுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தேர்தல் தொடர்பான வழிகாட்டல்கள் சம்பந்தமாக அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்களிக்கையில் விருப்பு வாக்கு தெரிவிற்காக 1,2,3 என இலக்கங்கள் அல்லது புள்ளடி பயன்படுத்தப்பட்டிருந்தன.
எனினும், நாளை(14) இடம்பெறவுள்ள நாடாளுமன்ற பொது தேர்தலின் போது இது பயன்படுத்தப்படாது என சுட்டிக்காட்டியுள்ளார்.
விருப்பு வாக்குத் தெரிவு
ஆனால், நாளை இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் போது விருப்பு வாக்குகளை வழங்க புள்ளடியை மாத்திரமே பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், உரிய முறையை பின்பற்றி அளிக்கும் வாக்கினை செல்லுபடியாகும் வாக்காக வாக்காளர்கள் மாற்ற வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |