கொழும்பில் ஒரே காவல்நிலையத்தை சேர்ந்த 14 அதிகாரிகள் வைத்தியசாலையில் அனுமதி

Colombo Hospitals in Sri Lanka
By Dharu Nov 19, 2026 04:27 PM GMT

கொழும்பு - தெமட்டகொட காவல்துறை நிலையத்தைச் சேர்ந்த 14 அதிகாரிகள் உடல்நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு வடக்கு சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் ஒரு பிரதான காவல்துறை பரிசோதகர், மூன்று காவல்துறை சார்ஜென்ட்கள், காவல்துறை கான்ஸ்டபிள்கள் மற்றும் ஒரு பெண் காவல்துறை கான்ஸ்டபிள் ஆகியோர் அடங்குவர் என்று அந்த அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

மேலதிக சிகிச்சை

இவர்கள் ஆரம்பத்தில் காய்ச்சல் மற்றும் தோல் தொற்று காரணமாக நாரஹேன்பிட்டியில் உள்ள காவல்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் ஒரே காவல்நிலையத்தை சேர்ந்த 14 அதிகாரிகள் வைத்தியசாலையில் அனுமதி | 14 Officers Same Police Station Admitted Hospital

பின்னர், பிரதம காவல்துறை பரிசோதகர் மற்றும் பெண் காவல்துறை கான்ஸ்டபிள் ஆகியோர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் வைத்திய நிபுணர்களின் கருத்துப்படி, குறித்த அதிகாரிகளின் உடலில் நோய்கிருமி உட்புகுந்ததே அவர்களின் உடல்நலக்குறைவுக்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.