தாய்வான் வான் எல்லைக்குள் சீன விமானங்கள்

China Taiwan World
By Laksi Jul 22, 2024 10:59 AM GMT

சீனாவின் 12  இராணுவ விமானங்கள் தாய்வானின் தென் மேற்கு மற்றும் தென் கிழக்கு வான் பாதுகாப்பு எல்லைக்குள் அத்துமீறி நுழைந்துள்ளதாக தாய்வான் தேசிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் தமது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள.அறிக்கையில், ''கடந்த வாரம் சீனாவின் நான்கு கரையோர காவல் படைக் கப்பல்கள் தாய்வானின் கட்டுப்பாட்டிலுள்ள கின்மென் கவுண்டி பகுதியில் பிரவேசித்தது.

சீன இராணுவ விமானங்கள் 

இது ஜுலை மாதத்தில் இடம்பெற்ற முதலாவது அத்துமீறலாகும். தற்போது 16 சீன இராணுவ விமானங்கள் தாய்வானுக்கு அருகில் அவதானிக்கப்பட்ட போதிலும் அவற்றில் 14 விமானங்கள் எமது வான் பரப்புக்குள் பிரவேசித்துள்ளன.

அத்தோடு 09 சீன கடற்படைக் கப்பல்களும் தாய்வான் எல்லைக்கு அருகில் காணப்பட்டன" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW