மட்டக்களப்பில் 120 வர்த்தக நிலையங்களில் திடீர் பரிசோதனை
மட்டக்களப்பு(Batticaloa) - ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வர்த்தக நிலையங்கள், பொதுச்சந்தைகள், அங்காடி வியாபார இடங்கள் என நூற்றுக்கும் அதிகமான வர்த்தக நிலையங்களில் திடீர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தமிழ் சிங்கள புத்தாண்டையொட்டி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் பணிப்பின் பேரில், இன்று (10) காலை மாவட்ட அளவீட்டு அலகுகள் நியமங்கள் சேவைகள் திணைகள அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சுற்றிவளைப்பு
குறித்த சுற்றுவளைப்பின் போது பாவனைக்கு உதவாக தராசுகள், முத்திரையிடப்படாத நிறுத்தல் அளத்தல், கருவிகள் போன்றவற்றை வைத்து வியாபாரம் செய்தமை, நிறை குறைவாக விற்பனை செய்தமை உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளின் பெயரில் நான்கு வர்த்தகர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், இவ்வாறான சுற்றிவளைப்புகள் மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

