மத்ரஸாவில் 12 வயது சிறுவன் உயிரிழப்பு! ஆர்ப்பாட்டத்தில் குதித்த பிரதேச மக்கள்
பதுளையில் வெலிமடை பிரதேச மக்கள் நேற்று (14) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த பிரதேசத்தில் உள்ள மத்ரஸா ஒன்றின் குளியலறையில் கடந்த 03 ஆம் திகதி சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சந்தேகம் இருப்பதாக கூறி, அந்த மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்கள் கோரிக்கை
12 வயதுடைய சிறுவர் ஒருவரே இவ்வாறு மத்ரஸா ஒன்றின் குளியலறையில் உயிரிழந்துள்ளார்.

ஆரம்பத்தில் சிறுவன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது சிறுவனின் மரணம் குறித்து சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சிறுவனின் மரணம் குறித்து விரிவான விசாரணைகளை நடத்த வேண்டும் என்று அப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை, 12 வயது சிறுவன் எவ்வாறு உயிரை மாய்த்துக்கொள்ள முடியும். இது மர்மமாக உள்ளது என அப்பிரதேச மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.