நடுக்கடலில் கைப்பற்றப்பட்ட 11 கிலோ தங்கம்! கடற்படையினர் திடீர் சுற்றிவளைப்பு

Sri Lanka Police Investigation India Sri Lanka Navy Gold
By Aanadhi Jan 05, 2025 01:01 AM GMT
Aanadhi

Aanadhi

இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்திச் செல்ல முயற்சித்த மூவர் கடற்படையினர் மடக்கிப்பிடித்துள்ளனர்.

குறித்த சுற்றிவளைப்பு சம்பவம் நேற்று(05.01.2024) இடம்பெற்றுள்ளது.

சுமார் பதினொரு கிலோ தங்கத்துடன் மூன்று சந்தேக நபர்களை பத்தலங்குண்டுவைக்கு அண்மித்த கடலில் வைத்து இலங்கை கடற்படையினர் மடக்கிப்பிடித்துள்ளனர்.

கடற்படை புலனாய்வு பிரிவு

கடற்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றிவளைப்பில் 11 கிலோ 300 கிராம் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடுக்கடலில் கைப்பற்றப்பட்ட 11 கிலோ தங்கம்! கடற்படையினர் திடீர் சுற்றிவளைப்பு | 11 Kg Of Gold Seized In The Middle Of The Sea

இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளின் பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது.