தேர்தல் அத்துமீறல்களால் இதுவரையில் 100 பேர் கைது
Sri Lanka
Sri Lankan Peoples
Crime
Election
Parliament Election 2024
By Rakshana MA
இலங்கையில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தினை சட்டவிரோதமாக முன்னெடுத்த குற்றச்சாட்டில் இதுவரையில் 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் கடந்த இரண்டு வாரத்தினுள் 39 குற்றச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது.
சட்ட விரோதமான செயல்கள்
மேலும் குறித்த 2 வாரக் காலப்பகுதிக்குள் 8 இலட்சத்திற்கும் அதிகமான பதாகைகள் மற்றும் சுவரொட்டிகள் அகற்றப்பட்டுள்ளன. இவற்றை முழுமையாக அகற்றி சுத்தம் செய்ய நாடளாவிய ரீதியில் 1592 பணியாட்கள் கடமையில் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |