ஐந்து ஆண்டுகளில் அரசாங்கம் ஆட்சியை கைவிடாது
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஐந்து ஆண்டுகளில் ஆட்சியை கைவிடப் போவதில்லை என பிரதி அமைச்சர் ரீ.பி. சரத் தெரிவித்துள்ளார்.
ஐந்து ஆண்டுகள் மட்டும் ஆட்சி செய்யும் நோக்கில் அரசாங்கம் ஆட்சியை முன்னெடுக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாறாக நீண்ட காலத்திற்கு ஆட்சி செய்ய இந்த அரசாங்கம் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் விருப்பத்தின் பேரிலும் ஜனநாயக ரீதியான தேர்தலிலும் இந்த அரசாங்கம் தெரிவானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் ஐந்தாண்டு காலத்திற்கு மட்டுமன்றி நீண்ட காலத்திற்கு ஆட்சி செய்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் சமூக, பொருளாதார மாற்றங்கள் பொதுவாக பதினைந்து ஆண்டுகளில் இடம்பெறும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த மாற்றம் நிகழ ஆரம்பித்துள்ளதாகவும் இது ஆரம்பமேயாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
உலக நாடுகளில் பாரியளவில் சமூகப் பொருளாதார மாற்றங்கள் இடம்பெற்ற போதிலும் இலங்கையில் கடந்த 76 ஆண்டுகளாக ஆட்சி செய்தவர்கள் அந்த மாற்றங்களுக்கு இடமளிக்கத் தவறியுள்ளதாக பிரதி அமைச்சர் ரீ.பி. சரத் குற்றம் சுமத்தியுள்ளார்.