காசாவில் மீண்டும் சந்தைகள் திறப்பு : புதிய உணவை வாங்கும் மக்கள்
காசாவின் கான் யூனிஸில் சந்தைகள் மீண்டும் திறக்கப்பட்டதால் பாலஸ்தீனியர்கள் புதிய உணவை வாங்கும் புகைப்படங்களை சர்வதே ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
இஸ்ரேல் மற்றும் காசா இடையிலான போர் நிறுத்தப்பட்டு காசாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் வெளியேறியதை அடுத்து தற்போது பாலஸ்தீனியர்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், காசாவின் நகரங்கள் மற்றும் கிராமங்களில் இருந்து இஸ்ரேலியப் படைகள்வெளியேறியதை தொடர்ந்து நகரத்தின் அழிக்கப்பட்ட கட்டிடங்களுக்கு இடையில் சந்தைக் கடைகள் மீண்டும் திறக்கத் தொடங்கியுள்ளன.
மேலும், இஸ்ரேல் காசாவிற்குள் புதிய உணவு நுழைவதைத் தடைசெய்துள்ளதுடன் பிராந்தியத்தின் வளமான நிலத்தின் பெரும்பகுதியை அழித்து ஆக்கிரமித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |


