இஸ்ரேலிய சிறைகளில் நடக்கும் கொடுமைகளை விவரிக்கும் பலஸ்தீன பத்திரிகையாளர்
இஸ்ரேலிய சிறைகளில் நடக்கும் கொடுமைகள் மற்றும் உணவு பற்றாக்குறை முன்னெப்போதும் இல்லாத அளவை எட்டியுள்ளதாக பலஸ்தீன பத்திரிகையாளர் அலா ரிமாவி தெரிவித்துள்ளார்.
குற்றச்சாட்டு அல்லது விசாரணை இல்லாமல் இரண்டு ஆண்டுகள் இஸ்ரேலிய சிறையில் அடைக்கப்பட்டிருந்து, கடந்த வாரம் விடுவிக்கப்பட்ட பின்னர் அலா ரிமாவி இதனை தெரிவித்துள்ளார்
வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
துஷ்பிரயோகம் மற்றும் உணவு பற்றாக்குறை
இஸ்ரேலிய சிறைகளில் நடக்கும் கொடுமைகள் மற்றும் உணவு பற்றாக்குறை முன்னெப்போதும் இல்லாத அளவை எட்டியுள்ளதாக ரிமாவி கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், "நான் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது, எனது எடை 97 கிலோவாக இருந்தது, ஆனால் இப்போது எடை வெறும் 47 கிலோ மட்டுமே இருக்கிறது.
அத்துடன், நான் என் சிறுமிகளை கட்டியணைத்த போது, அவர்கள் என்னிடம் சொன்னார்கள்; "அப்பா, நீங்கள் எங்களை காயப்படுத்துகிறீர்கள்."
ஏனெனில், என் எலும்புகள் வெளியே நீட்டியிருந்தன, அது அவர்களுக்கு வலியை ஏற்படுத்தின.
அத்தோடு, எனது சிறைத் தோழர் ஃபரூக் பலவீனமானவராக இருந்தார். அவர் தனது மகளை எப்படி நேசித்தார் என்பதைச் சொல்லச் சொல்ல சிறிது சக்தி பெற்றார். நான் அவரிடம், ‘நீ பிழைப்பாய்’ என்று சொன்னேன்.
அத்துடன், விடுதலைக்கு முன், என்னைப் பார்க்க வேண்டும் என்று கூறியிருந்தார். ஆனால், நான் விடுதலையானதும், அவர் இறந்துவிட்டார் என்று அறிந்தேன்.
மேலும், மக்கள் மயக்கம் அடைந்து, சரிந்து விழுந்து, இறந்து போனதை நான் பார்த்தேன், ஆனால் எனக்கு அவர்களுக்கு உதவி எதுவும் செய்ய முடியவில்லை." என்றும் இஸ்ரேலிய சிறைகளில் நடக்கும் கொடுமைககளை பற்றியும் உணவு பற்றாக்குறை பற்றியும் அவர் விபரித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |