காசா போர் நிறுத்தம்; வீடுகளை நோக்கி படையெடுக்கும் பலஸ்தீனர்கள்

Palestine Israel-Hamas War Gaza
By Faarika Faizal Oct 11, 2025 12:58 PM GMT
Faarika Faizal

Faarika Faizal

போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்ததையடுத்து, பலஸ்தீனர்கள் தங்கள் வீடுகளை நோக்கி திரும்பி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்துவிட்டதாக இஸ்ரேல் அறிவித்தது.

இந்தநிலையில், ஆயிரக்கணக்கான பலஸ்தீனர்கள் தங்கள் வீடுகளை நோக்கி திரும்பி வருகின்றனர்.

இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட பலஸ்தீனியர்களின் உடல்கள்

இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட பலஸ்தீனியர்களின் உடல்கள்

போர் நிறுத்தம்

அத்துடன், போர் நிறுத்தம் அறிவிக்கபப்ட்டதை தொடர்ந்து இஸ்ரேலிய படைகள் தங்கள் இருப்புகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இதையடுத்து, வடக்கு காசாவை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் மீண்டும் இடம்பெயர ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பலஸ்தீனியர்கள்

2023 ஒக்டோபர் ஏழாம் திகதி தாக்குதலுக்கு பிறகு மில்லியன் கணக்கான பலஸ்தீனியர்கள் வடக்கு காசா பகுதியில் இருந்து வெளியேற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இந்தநிலையில், தற்போது அவர்கள் வடக்கு பகுதிக்கு திரும்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

காசாவில் நிரந்தர அமைதி : ஹமாஸின் அறிவிப்பால் புதிய திருப்பம்

காசாவில் நிரந்தர அமைதி : ஹமாஸின் அறிவிப்பால் புதிய திருப்பம்

காசா யுத்தத்தின் இரண்டு வருட நினைவு; மட்டக்களப்பில் பெண்கள் கவனயீர்ப்பு நடைபயணம்

காசா யுத்தத்தின் இரண்டு வருட நினைவு; மட்டக்களப்பில் பெண்கள் கவனயீர்ப்பு நடைபயணம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW