மஹ்மூத் சாதாரண தர பிரிவின் பெறுபேறுகளை மேம்படுத்தல் செயற்திட்டங்கள் ஆரம்பம்
கல்முனை(Kalmunai) மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) க.பொ.த (ச/த) - 2024 தொகுதி மாணவிகளின் பெறுபேறுகளை மேம்படுத்தும் நோக்கில் பாட ரீதியிலான கருத்தரங்குகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த கருத்தரங்கு அந்த பிரிவின் பகுதித்தலைவர் ஏ.ஆர்.எம். நளீம் தலைமையில் நேற்று(20) சேர் ராஸிக் பரீட் மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
26 மாணவிகள் சாதனை
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கல்லூரியின் முதல்வர் ஏ.பி. நஸ்மியா சனூஸ் (SLEAS) கலந்து கொண்டு மாணவிகளுக்கு சிறந்த அறிவுரை, ஆலோசனைகளையும் வழங்கினார்.
அத்துடன், பாட ரீதியிலான கருத்தரங்குகள் கல்லூரியின் சிரேஷ்ட ஆசிரியர்களின் வழிகாட்டல்களில் பல்லூட எறிவை (Multimedia) தொழில்நுட்ப உதவிகளுடன் இடம்பெற்றுள்ளதுடன், கடந்த வருடம் இந்த பாடசாலையில் இருந்து 26 மாணவிகள் ஒன்பது பாடங்களிலும் ஏ சித்தி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |