பேருந்தில் பல்கலைக்கழக மாணவி ஒருவரை துன்புறுத்தியவர் கைது
பேருந்தில் பல்கலைக்கழக மாணவி ஒருவரை துன்புறுத்திய குற்றச்சாட்டில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹொரணையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
27 வயதுடைய கொழும்பு பல்கலைக்கழக மாணவியின் பின்னால் அமர்ந்திருந்த சந்தேக நபர், பலமுறை தகாத முறையில் அவரைத் தொட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வழக்கு விசாரணை
இதனையடுத்து,பேருந்தில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் அவரைப் பிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார்.
சந்தேகநபர் கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்ட நிலையில், அவரை தலா ரூ. 200,000 பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
அத்தோடு, வழக்கு மேலதிக விசாரணைக்காக எதிர்வரும் டிசம்பர் 1 ஆம் திகதிக்கு
ஒத்திவைக்கப்பட்டுள்ளது.