புத்தாண்டு டூடுல்: 2026 ஐ கொண்டாட்டத்துடன் வரவேற்கும் கூகுள்!

Sri Lanka Sri Lankan Peoples
By Fathima Dec 31, 2025 01:59 PM GMT
Fathima

Fathima

2025ஆம் ஆண்டு இன்றுடன் நிறைவு பெறும் நிலையில், 2026ஆம் ஆண்டு புத்தாண்டை வரவேற்கும் வகையில் கூகுள் சிறப்பு டூடுல் வெளியிட்டுள்ளது.

கூகுள் நிறுவனம் அவ்வப்போது பிரபல ஆளுமைகளின் பிறந்தநாள், பண்டிகை நாட்கள், முக்கிய தினங்கள் போன்ற நாட்களில் சிறப்பு டூடுலை வெளியிடுவது வழக்கம்.

புத்தாண்டு டூடுல்

2026ஆம் ஆண்டு புத்தாண்டை வரவேற்கும் வகையில் கூகுள் சிறப்பு டூடுல் வெளியிட்டது.

புத்தாண்டு டூடுல்: 2026 ஐ கொண்டாட்டத்துடன் வரவேற்கும் கூகுள்! | Google Welcomes 2026 With New Year Doodle

இந்தாண்டு நிறைவு பெற்று ஒரு புத்தம் புதிய ஆண்டு நெருங்கிக்கொண்டிருக்கிறது என்பதைப் பயனர்களுக்கு நினைவூட்டுகிறது.

பண்டிகைக்காலங்களை குறிக்கும் வகையில், பலூன்கள், வண்ணக் காகிதத் துண்டுகள் உள்ளிட்டவற்றால் 2026 அலங்கரிக்கப்பட்டுள்ளது.