Muthanmai | Muslim News in Tamil | Latest Muslim News Updates | Islam News in Tamil | Photo | Video
உயர் நீதிமன்றம் உட்பட நீதிமன்றங்களால் வழங்கப்படும் தீர்ப்புகளுக்கு
அரசாங்கம் முழுமையாகக் கட்டுப்படும் என்றும், அந்தத் தீர்ப்புகளைத் தாண்டி
வேறு எந்தத் தீர்மானங்களையும் எடுக்காது என்றும் ஜனாதிபதி அநுர குமார
திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பதுளை மாவட்ட மகளிர் மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், சட்டம் தற்போது
அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்படுவதாக குறிப்பிட்டார்.
சட்ட நடவடிக்கை
இதன் காரணமாகவே, கடந்த காலத்தில் சலுகைகளையும் சட்டப் பாதுகாப்பையும்
அனுபவித்தவர்கள் இப்போது சட்ட நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராடி வருவதாகவும்
குறிப்பிட்டார்.
நாடாளுமன்றம் சட்டங்களை உருவாக்குகிறது, குற்றப்புலனாய்வுத் திணைக்களம், இலஞ்ச
ஊழல் ஆணைக்குழு மற்றும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வழக்குகளைத் தாக்கல்
செய்கின்றனர்.
இறுதி முடிவு
இறுதியாக நீதித்துறையே முடிவெடுக்கிறது. ஒரு தீர்ப்பு தமக்கு சாதகமாக
இல்லாதபோது, அதை ஏற்றுக்கொள்ள மறுத்தால் நாட்டின் சட்டத்தின் ஆட்சி நிலைக்காது
என்றும் அவர் வலியுறுத்தினார்.
நாங்கள் நீதித்துறையின் முடிவுகளுக்குத் தலைவணங்குகிறோம். அதைத் தாண்டி வேறு
எந்த முடிவுகளையும் எங்களிடம் எதிர்பார்க்க வேண்டாம் என ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்.